ஸ்ரீ குருப்யோ நமஹ :
நமஸ்காரம்
உலகில் பல விதங்களில் ஜீவனம் செய்யும் பொருட்டு பல விதமான தொழில் முறைகள் வர்தகரீதியாக நடைமுறைபடுத்தப்படுகிறது, ஆயினும் சமையல் தொழில் மட்டும் வர்த்தகரீதியாக இல்லாமலும் ஈடுபாடுடனும், மனம் உவந்து, லாபம் குறைந்தாலும் தரம் குறையாமல் சிறந்த முறையில் செய்ய வேண்டிய புனிதமான பணியாகும்.
மேற்கூறிய இந்த சிறந்த பணியினை எங்களது பாட்டனார் காலம் முதற்கொண்டு, தாய்தந்தையர் அதன்பிறகு நாங்கள் (சகோதரர்கள்) இதனைத் தொடர்ந்து எங்களது புதல்வர்கள் என எங்களது பாரம்பரியம் தொடர்ச்சியான ஒன்றாகும். இந்த ரீதியிலே எங்களது தனிப்பட்ட தொழில் அனுபவம் மட்டும் ஐம்பது ஆண்டுகளைத்தாண்டி இன்றும் புதுப்பொலிவுடன் இருப்பதன் காரணம் “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதை பழமொழியாக மட்டுமின்றி நடைமுறையிலும் செயல் முறையிலும் கடைபிடித்து வருகிறோம் என்பதை கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறோம்.
" " என்பது S. வெங்கட்ராமன் & S சதாசிவம் என்பதின் சுருக்கமே, எங்களை பெயர் சொல்லி அழைப்பதைவிட
என்று அழைப்பவர்கள்தான் அதிகம்!
இப்போதெல்லாம் எந்தத்திருமணத்திற்கு சென்றாலும் எங்களைத் தெரிந்தவர்கள் தான் அநேகமாக அத்திருமண வீட்டாரின் உறவினர்களாக இருப்பார்கள் இன்னும் சொல்லப் போனால் எங்கள் நிறுவனம் வாயிலாக திருமணம் நடந்த தம்பதிகள் தங்கள் மகன், மகளுக்கு திருமணம் செய்வது, நாங்கள் செய்து வைத்த திருமணத்தம்பதிகள் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி செய்து கொள்வது, தகப்பனாருக்கு சஷ்டியப்தபூர்த்தி அன்றைய தினம் என்றால் இன்றையதினம் மகனுக்கு சஷ்டிஅப்துபூர்த்தி, நாங்கள் உபநயனம் செய்துவைத்த பையன் இன்று தன் மகனுக்கு உபநயனம் செய்வது என்று இந்த பட்டியல் நின்றுவிடாமல், சென்னையில் நூறுவருடங்களைத் தாண்டிய பல முன்னணி நிதி நிறுவனங்களின் வருடாந்திர General Body meeting, சுமார் 36 ஆண்டு காலமாக தொடர்ந்து ஒரு நிதி நுறுவனத்தின் General Body Meeting, இன்னும் பல நிறுவனங்களில் பல ஆண்டுகள் எனவும் எங்கள் சேவை ஒரு வரலாறு என்பதை மிக்க மகிழச்சியுடனும், பணிவன்புடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த முகவுரையை படித்த எங்கள் வாடிக்கையாளர்களே நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று எங்கள் இருப்பிடம் மேற்குமாம்பலம், வேறுகிளைகள் இல்லை. என்பது ஆலமரம், ஊன்றும் விழுதுகள் மீண்டும் மரமாகுமேதவிர வேறு இடம் செல்லாது, பரந்து விரிந்து செயல்படும், எங்கள் வாரிசுகள் எங்கள் பிள்ளைகள் மட்டுமே! மறவாதீர், ஏமாறாதீர், தொடர்ந்து வலைதளத்தில் வளையவருவோம்.
"சமையல் தொழில் எங்கள் மூலப்பொருள், வாடிக்கையாளர் எங்கள் மூலவர்கள்”
வணங்குகிறோம்வாழ்க வளமுடன்
S. வெங்கடராமண்
S. சதாசிவம்